world

img

சீன ஜனாதிபதியாக மீண்டும் ஜின்பிங்

பெய்ஜிங், மார்ச் 10-  சீனாவின் தற்போதைய ஜனாதி பதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளருமான ஜி  ஜின்பிங் மீண்டும் சீனாவின் ஜனாதி பதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதாகும் ஜி ஜின்பிங்கை, சீன நாடாளுமன்றம் ஏகமனதாகத் தேர்வு செய்திருக்கிறது. மீண்டும் ஐந்து ஆண்டுகாலத்திற்கு அவர் ஜனாதிபதிப் பொறுப்பை வகிப்பார். மாசே துங்கிற்குப் பிறகு இரண்டு ஐந்து ஆண்டுகாலப் பொறுப்பை வகித்துவிட்டு, மூன்றாவது முறை யாக ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படுபவர் ஜி ஜின்பிங்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2,950 நாடாளுமன்ற உறுப்பினர் களால் ஏகமனதாகத் தேர்வு செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன், அர சியல் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து அதன்படி செயலாற்றுவேன் என்று ஜி ஜின்பிங் உறுதி எடுத்துக் கொண்டார். மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தனது பணியை அவர் தொடர்வார்.  துணை ஜனாதிபதியாக ஹான் ஜெங் தேர்வாகியிருக்கிறார். இவரது தேர்வையும் சீன நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.  தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தோடு பிரதமர் லீ கெகியாங் கின் பதவிக்காலம் நிறைவுபெறு கிறது. புதிய பிரதமர் சனிக்கிழமை யன்று தேர்வு செய்யப்படவுள்ளார். மார்ச் 13 ஆம் தேதியன்று புதிய பிரத மர் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.