world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்....

வாஷிங்டன்

ஒரு மாதம் தாமதம்

அமெரிக்காவில் 18வயதுக்கு மேற்பட்ட குடிமக்களில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்துவது என்ற இலக்கினை ஒரு மாதம்தாமதமாக பைடன் அரசு எட்டி யுள்ளது. 70சதவீதம் பேருக்கு ஜூலை 4ம்தேதிக்குள் தடுப்பூசி செலுத்திவிடுவோம் என்று பைடன் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட நாளில் அந்த இலக்கை எட்டமுடியவில்லை. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50.24சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

                                                                               $$$$$$$$$$$$$$

பெர்லின்

நூறு வயது குற்றவாளி

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பாசிச ஹிட்லரின் கொடூரமான சித்ரவதை முகாம்களில் நடந்த படுகொலைகள் ஏராளம் ஏராளம். அதில் 1942-45 ஆண்டுகளில் ஜெர்மனியின் பெர்லின் மாநகருக்கு அருகில் உள்ள சச்சென்ஹவுசென் முகாமில் அடைக்கப்பட்ட 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களில் சோவியத் ஒன்றியத்தின் போர்க் கைதிகள் 3518 பேரை விஷப்புகை செலுத்தி படுகொலை செய்வதற்கு உதவியாக இருந்த அந்த முகாமின் பாதுகாவலர் இன்னும் உயிரோடு இருக்கிறார். அவருக்கு தற்போது வயது 100. அவரது பெயர் பிரடெரிக் கார்ல்பெர்க்கர்.  அவர் மீது இப்போது ஜெர்மனி அரசு குற்றச்சாட்டு முன் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. வயது முதிர்ந்தாலும் நடமாட்டம் இருப்பதால் ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டரை மணி நேரம் நீதிமன்றத்திற்கு வந்து விசாரணையில் பங்கேற்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 அக்டோபர் முதல் நீதிமன்ற விசாரணை முழுமையாக நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

                                                                               $$$$$$$$$$$$$$

வாஷிங்டன்

ராஜிய மோதல்

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ராஜீய ரீதியான மோதல் தொடர்ந்து கொண்டிருக் கின்றது. செப்டம்பர் 3ம்தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள ரஷ்யத் தூதர்களில் 24 பேர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது. அவர்களது விசாக்காலம் முடிவடைவதால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக காரணம் காட்டப்பட்டுள்ளது. ராஜீயதூதர்களுக்கு பொருந்தாத விதத்தில் விசா விதிமுறைகளை அமெரிக்க நிர்வாகம் வேண்டுமென்றே தன்னிச்சையான முறையில் கடினமாக்கியுள்ளது என்று அமெரிக்காவிற்கான ரஷ்யத் தூதர் அனடோலி அந்தோனவ் குற்றம்சாட்டியுள்ளார். 

                                                                               $$$$$$$$$$$$$$

பெய்ஜிங்

பாதிப்பு 7 பேர் தான்

சீனாவின் வுகான் மாநகரம் உள்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு வடிவங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்களில் இத்தகைய ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வுகான் நகரில் மொத்தமுள்ள 1.1 கோடி மக்களுக்கும் மிகத் தீவிரமாக தொற்று பாதிப்பு உள்ளதா என்ற பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வுகான் நகரில் புதிதாகதொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டிரு ப்பவர்கள் வெறும் 7 பேர்தான். வெறும் 7 பேருக்கு தொற்று என்ற அறிந்தவுடனே ஒட்டுமொத்த வுகான் மாநகராட்சியும் சீனசுகாதார அமைச்சகமும் அடுத்தஒரு நபருக்குக் கூட பரவி விடக்கூடாது என்ற உறுதியோடு களத்தில் இறங்கியுள்ளன.

                                                                               $$$$$$$$$$$$$$

டெஹ்ரான்

ஈரான் மறுப்பு

ஓமன் கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அதிலிருந்த 2 மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று பிரிட்டனும் அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டியுள்ளன. இது சட்டவிரோதமான தாக்குதல் என்று கூறி, அதற்கு விளக்கம் அளிக்குமாறு லண்டனில் உள்ள ஈரான் தூதருக்கு பிரிட்டன் அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஈரான் முற்றாக மறுத்துள் ளது. இப்பிரச்சனையை மைய மாகக் கொண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

                                                                               $$$$$$$$$$$$$$

மணாகுவா

நிகரகுவா மீது குறி

லத்தீன் அமெரிக்க நாடானநிகரகுவாவின் துணை ஜனாதிபதியும் முதன்மைப் பெண்மணியு மான ரொசாரியோ முரிலோ, மனிதஉரிமைகளை மீறிவிட்டார் என்றுகூறி, நிகரகுவா நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறுதடைகளை விதித்து அறிவித்துள் ளது. அவர் மட்டுமல்லாது, நிகரகுவாவின் ஏழு மூத்த தலைவர்கள் மீதும் இத்தகைய குற்றச்சாட்டு புனையப்பட்டு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சோசலிஸ்ட் தலைவர் டேனியல் ஓர்ட்டேகாவின் ஆட்சி நடக்கும் நிகரகுவாவில் அரசியல் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்த ஏகாதிபத்திய சக்திகள் முயற்சித்து வருகின்றன. அங்குள்ள எதிர்க்கட்சிகளை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மீது அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை, சர்வதேச அளவிலான மனித உரிமை மீறல் என்று, உண்மை யிலேயே சர்வதேச மனிதஉரிமை விதிகளை காலில் போட்டு மிதித்துவரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முத்திரை குத்தியுள்ளன. 

                                                                               $$$$$$$$$$$$$$

அட்டிஸ் அபாபா

மிதந்து வந்த உடல்கள்

கிழக்கு ஆப்பிரிக்க நாடானஎத்தியோப்பியாவில் ஆளும்அரசுக்கும் அதற்கு எதிராகசெயல்படும் ஆயுதக்குழுக்களுக் கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் சூடான் எல்லையில் உள்ள எத்தியோப்பியாவின் திக்ரே பிராந்தியத்தில் ஓடும் நதியில் 40க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மிதந்து வந்தன. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திக்ரேயில் இரு தரப்புக்கும்இடையே நடந்த மோதலிலிருந்து தப்பிப்பதற்காக வெளியேறிய மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விசாரணை துவங்கியுள்ளது.

                                                                               $$$$$$$$$$$$$$

பெய்ஜிங்

இந்திய மாணவர் மரணம்

சீனாவின் டியான்ஜின் நகரில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர், தனது விடுதி அறையில் இறந்த நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20வயதான அந்த மாணவரின் பெயர் அமன் நாக்சென். பீகார் மாநிலம் தயாவைச் சேர்ந்த இவர் டியான்ஜின்நகரில் உள்ள சர்வதேச வர்த்தக கல்வி மையத்தில் பயின்று வந்தார்.ஜூலை 23க்குப் பிறகு குடும்பத்தின ருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். அவரது மரணம் குறித்து சீன அதிகாரிகள்தீவிர விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

                                                                               $$$$$$$$$$$$$$

லவாசா

ஆறாவது ஹாட்லைன்

இந்திய- சீன ராணுவத்திற்கு இடையில் 6வது ஹாட்லைன் தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது.  சிக்கிம் மாநிலத்தின் கோங்ரா லா எனும் இடத்தில் நிலைநிறுத்தப் பட்டுள்ள இந்திய ராணுவப் பிரிவுக்கும் திபெத் சுயாட்சிப் பிரதேசத்தின் கம்பா ட்ஜோங் எனும் இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன ராணுவப் பிரிவுக்கும் இடையில் இந்த ஹாட்லைன் தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும்இடையே பரஸ்பரம் நம்பிக்கை உருவாக்குவது, நட்புரீதியான உறவுகளை நிறுவுவது என்ற அடிப்படையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த ஹாட்லைன் தொடர்பு நிறுவப்பட்டுள்ளது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                                                                               $$$$$$$$$$$$$$

ஐநா சபை

தலைவராக இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் தலைவராக இந்தியா  பொறுப்பேற்றுள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தநாடுகளுக்கு இடையே சுழற்சி முறையில் தலைவர் பதவி கிடைக்கப் பெறுகிறது. 2021-22ஆம் ஆண்டுக்கான தலைவர்பதவி இந்தியாவுக்கு கிடைத்துள் ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் தவிர இந்தியா உள்ளிட்ட எஞ்சிய பத்து நாடுகள் நிரந்தர மில்லா உறுப்பு நாடுகள் ஆகும். இந்தப் பின்னணியில் முதல்முறையாக பாதுகாப்புக் கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமல்லா உறுப்பு நாடாக 2021 ஜனவரி முதல் இந்தியா இணைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கவுன்சிலில் உறுப்பு நாடாக இந்தியா  இருக்கும்.

;