world

img

சீனாவின் வறுமை ஒழிப்பு குறித்து வெள்ளையறிக்கை 


பெய்ஜிங், ஏப்.12-
வறுமை ஒழிப்பில் சீனாவின் அனுபவம் மற்றும் பங்களிப்பு குறித்து சின அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
சீன அமைச்சரவையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 100 ஆண்டுகளாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்குக்காக தலைமை தாங்கி, அவர்களை ஒற்றுமையுடன் வழிநடத்தி வருவதை விவரிக்கிறது. மேலும் மக்கள் வறுமையுடன் போராடி வருவதை  பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்திருக்கிறது. அதிலும் குறிப்பாக , கடந்த 8 ஆண்டு கால தொடர்ச்சியான முயற்சியுடன், 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள், புதிய யுகத்தில் வறுமை ஒழிப்பு இலக்கை சீனா திட்டப்படி நிறைவேற்றியுள்ளது. சீன தேசத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டு கால வளர்ச்சி வரலாற்றில் வறுமையை முதல்முறையாகவும் ஒட்டுமொத்தமாகவும் ஒழித்து வறுமை ஒழிப்புப் போரில் வெற்றி பெற்றிருக்கிறது. சீன மக்கள் குடியரசு  மக்களின் கனவை நனவாக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயம் செய்த வறுமை ஒழிப்பு இலக்கை 10 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே நிறைவேற்றி சாதனை படைத்திருக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில்  20 சதவிகிதத்தை சீனா கொண்டிருக்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட சீன தேசத்தின்  வளர்ச்சி வரலாற்றிலும், மனிதகுல வறுமை ஒழிப்பு மற்றும் மனிதகுல வளர்ச்சி வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 

;