world

“ஒடுக்குமுறையின் முகம் அமெரிக்கக் கூட்டணி”

பெய்ஜிங், ஆக.8- அமெரிக்கா தலைமையிலான ஜி7 கூட்டணி, ஒடுக்குமுறை மற்றும் தாக்குதல்களின் முகமாக இருக்கிறது என்று சீனா விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவரான நான்சி பெலோசியின் தைவான் பயணம் சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக அமைந்தது.  ஒரே சீனா என்ற கொள்கை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதாகும். அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஒரே சீனம் என்பதை ஒப்புக்  கொண்டுள்ளன. இருப்பினும், சீனாவின் இறையாண்மையை பறிக்கும் வகையில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் அதன்  கூட்டாளி நாடுகள் செயல்பட்டு வருகின்றன. நான்சி பெலோசியின் தைவான் பயணத்தின்போது அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் அமைதி காத்தன. ஆனால், தற்போது அந்த பயணத்திற்கு எதிராக சீனா எடுத்து வரும் எதிர்நடவடிக்கைகளை விமர்சனம் செய்து ஜி7 நாடுகள் அறிக்கை வெளி யிட்டுள்ளன. இந்த அறிக்கையை சீனாவின் வெளி யுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவ ரான ஹுவா சுன்யிங் கடுமையாகக் கண்டித்திருக் கிறார்.

இது குறித்துப் பேசிய அவர், “விதிகளின் அடிப்படையிலான சர்வதேச அமைப்பு பற்றி ஜி7 மற்றும் ஐரோப்பிய வெளியுறவுத்துறை அமைச்ச ர்கள் பேசுவது திருடர்களின் வாதமாகும். சீனாவின் இறையாண்மையைக் குலைக்கும் வகை யில் நான்சி பெலோசி தைவான் சென்றபோது இவர்கள் அமைதியாக இருந்தார்கள்” என்றார். தற்போது தைவான் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அடிப்படைக் காரணமே சீனாவின் எதிர்ப்பை மீறி, அமெரிக்காவின் முக்கியமான அரசுத் தலைவர்களில் ஒருவரை ராணுவ விமானத்தில் தைவானுக்கு செல்வதை அனுமதித்ததேயாகும் என்று சுட்டிக்காட்டும் ஹுவா  சுன்யிங் “அமெரிக்கா-சீனா உறவு என்பது ஒரே சீனம் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவான தாகும். அதை மீறும் வகையில் சீனாவின் இறை யாண்மைக்கும், நில ரீதியான ஒற்றுமைக்கும் எதிரான வகையில் நான்சி பெலோசியின் பயணம் அமைந்திருக்கிறது” என்று கண்டிக்கிறார். பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதும், ஒடுக்குவதும் அமெரிக்கக் கூட்டாளிகளின் வேலை யாக உள்ளது. அத்தகைய சர்வதேச சமூகத்திற்கு  எதிரான நடவடிக்கைகளின் முகமாக ஜி7 மாறி யுள்ளது என்று ஹுவா சுன்யிங் விமர்சித்துள் ளார். தைவானை முன்னிறுத்தித் தன்னை அச்சுறுத்தும் அமெரிக்காவின் சதிச் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவானை ஒட்டி யிருக்கும் கடற்பகுதிகளில் சீனா போர்ப்பயிற்சி களை முடுக்கி விட்டுள்ளது.

;