world

img

 ’ஒன் பிளஸ் 9ஆர்டி’  ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகம் 

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஒன் பிளஸ் 9ஆர்டி’  ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமாகியுள்ளது. 

’ஒன் பிளஸ் 9ஆர்டி’   ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இந்தியாவிலும் சந்தைப்படுத்த இருக்கிறார்கள். ஆனால் அறிமுகத் தேதி குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஒன் பிளஸ் 9ஆர்டி  ஸ்மார்ட்போன் 6.5 ஃபுல் எச்டி திரை, 8ஜிபி  + கூடுதலாக 128 ஜிபி, ஆன்டுராய்ட் 11 மாடல், 50 எம்பி முதன்மை கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா, மெமரி கார்டு வசதி, 4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி  போன்ற சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது. 

இந்திய விற்பனை விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.24,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

;