world

img

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மிக நீண்ட ஆற்றுப் பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து

சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் ரயில் பாதைகளை இணைத்திடும் மாபெரும் புதிய ஆற்றுப் பாலத்தின் பணி ஆகஸ்ட் 17 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. தொடங்கிய ஏழு ஆண்டுகளுக்குப்பின் மகத்தான இப்பணி நிறைவடைந்துள்ளது.

இதன் முழுப் பெயர் சீன-ரஷ்ய டோங்கியாங்-நிஸ்னெலினின்ஸ்கோயே பாலம் என்பதாகும். இது சீனாவின் வடகிழக்கில் அமைந்துள்ள நகரமான டோங்கியாங் என்பதையும் ரஷ்யாவில் அமுர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிஸ்னெலினின்ஸ்கோயே நகரத்தையும் இணைக்கிறது.  

இந்தப் பாலம் கட்டப்பட்டிருப்பதன் பொருள், சீனாவின் வடகிழக்கு ரயில்வேயானது இப்போது ரஷ்யாவின் சைபீரிய ரயில்வேயுடன் இணைக்கப்பட முடியும் என்பதாகும்.

இந்த ஆற்றுப் பாலத்தின் மொத்த நீளம் 2,215 மீட்டர் (7,300 அடிகள்) ஆகும். இதனைக் கட்டிமுடிக்க ஏழு ஆண்டுகளாகியிருக்கின்றன. இதற்கான கட்டமைப்புப் பணிகள் 2019இல் நிறைவடைந்தன. இறுதிக்கட்டப்பணிகள் ஆகஸ்ட் 17 அன்று நிறைவடைந்தது.

பாலத்தில் பெரும்பகுதி (1886 மீட்டர்கள்) சீனாவின் பக்கம் இருக்கிறது.

இவ்விரு பெரிய நாடுகளையும் இணைக்கும் இந்தப் பாலம் மட்டுமல்லாது, இதேபோன்று சாலை வழியிலும் இரு நாடுகளையும் இணைத்திடும் ஒரு பாதையையும் இரு நாடுகளும் இணைந்து இதற்கு முன்னதாக 2019இல் நிறைவேற்றி இருக்கின்றன. சீனாவில் உள்ள ஹெய்ஹெ (Heihe) மற்றும் ரஷ்யாவில் உள்ள பிளகோவெஷ்சென்ஸ்க் இரண்டையும் இணைக்கும் சாலைப் போக்குவரத்து 2019இல் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இரண்டு நகரங்களுக்கும் இடையே உலகின் முதல் கேபிள்-கார் போக்குவரத்தையும் தொடங்கிட இரு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது நிறைவடைந்ததும் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு எட்டு நிமிடங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்று வர முடியும்.

சீனாவிலிருந்து லண்டனுக்கு ரயில் மூலம் சென்றுவர சீனா திட்டமிட்டிருப்பதில் மிகவும் முக்கியமான நடவடிக்கையாக இந்தப் பாலம் கட்டப்பட்டது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.

இந்தப் பாலம் அமைக்கப்பட்டதன் காரணமாக டொங்கியாங் வழியாக மாஸ்கோ செல்வதற்கான தூரத்தில் 809 கிலோ மீட்டர் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக 10 மணி நேரம் பயண நேரமும் குறைந்திருக்கிறது.

;