world

img

சீன விண்கலம் எடுத்த செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு....

பெய்ஜிங்:
சீனாவின் ரோவர் ஜுராங் விண்கலம் எடுத்த செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பை காட்டும் புதிய புகைப்படங்களை சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்தஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக் குள் நுழைந்தது. 6 சக்கரங் களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும்.இதற்கிடையில் சீனா அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் கடந்த15-ம் தேதி செவ்வாய்கிரகத் தில் வெற்றிகரமாக தரைஇறங்கியது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின்புவியியல் அமைப்பு குறித்துஇந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.தியான்வென் -1 பயணத்தின் ஒரு பகுதியாக சூரிய சக்தியில் இயங்கும் ஜுராங் முதன்முதலில் செவ்வாய் கிரகத்தில் தரையிறக் கப்பட்டது. செவ்வாய் கிரகத்தின் வானிலை, சுற்றுச்சூழல் குறித்து ஆராய்வதற் காக சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய ஜுராங் ரோவர் மே 21ம் தேதிதரையிறங்கியது.செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பிற்கு மேலே உள்ளதியான்வென் -1 சுற்றுப்பாதையில் இருந்து இறங்கிய பிறகு,ஜுராங் தனது செவ்வாய் பயணத்தை உட்டோபியா பிளானிட்டியாவில் தொடங் கியது. மே 22 அன்று செவ்வாயில் பயணித்து ஆய்வு செய்து வருகிறது.ரோவர் ஜுராங், செவ்வாயின் மண் பரப்புகள், பாறைகள், மற்றும் கற்களை படம் பிடித்து அனுப்பியுள்ளது.செவ்வாய் கிரகத்தின் பரப்பை காட்டும் வகையிலான சீனாவின் ரோவர் ஜுராங் எடுத்த புதிய புகைப்படங்களை சீனதேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ளது.

;