world

img

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க சாத்தியமில்லை - பீட்டர் எம்பாரக்

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் ஒபாமா கொரோனா வைரஸ்சை சீனா திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கி பரப்பியதாக குற்றம் சாட்டினார். இந்தியாவிலும் சங்பரிவார அமைப்புகள் சீனா ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரப்பப்பட்டதாக குற்றம் சாட்டினர். 
இந்நிலையில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உருவாக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு சீனா சென்று ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து செவ்வாயன்று ஊகானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தலைவர் பீட்டர் எம்பாரக் கூறியதாவது. 
கொரோனா வைரஸ் ஊகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு தற்செயலாக அங்கிருந்து வெளியேறி பொதுமக்களுக்கு பரவியிருப்பதற்கான சாத்தியமில்லை. கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
 

;