world

img

சீனர்களுக்கு எதிரான விஷமபிரச்சாரத்தை கண்டித்து லண்டனில் பேரணி

சீனர்களுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி லண்டனில் கண்டன பேரணி நடைபெற்றது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் அண்மை காலமாக சீனர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. குறிப்பாக, கொரோனா என்கிற கோவிட் 19 வைரஸ் பரவலுக்கு பிறகு இந்த வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகளவிற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீன தேசத்தின் அபரிவிதமான பொருளாதார வளர்ச்சி, உலக நாடுகளில் சீன நாட்டின் செல்வாக்கு அதிகரிப்பு ஆகியவையே இந்த வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது. அதேநேரம், இத்தகைய இனவெறி வெறுப்பு பிரச்சாரங்களானது தனிநபர்கள், அமைப்புகள் ஆகியவற்றை தாண்டி பல அரசு நிர்வாகங்களும் அதனை முன்னிற்று அரங்கேற்ற துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் சீனர்கள் மற்றும் கிழக்கு, தென்கிழக்கு ஆசியர்களுக்கு எதிராக திட்டமிட்டு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வெறுப்பு பிரச்சாரங்களை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டவர்கள் சீனர்களுக்கு எதிராக நடத்தப்படும் பனிப்போரை அந்நாட்டு அரசு உடனடியாக முடிவிற்கு கொண்டு வரக்கோரி பாதகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

குறிப்பாக, தங்களையும், தங்களது தொழில் நிறுவனங்களையும் புறக்கணிக்கக்கோரி கிளப்பி விடப்படும் பொய் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு நிர்வாகத்தில் உயர்மட்டத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளே, சீனர்களுக்கு எதிரான விஷம பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

;