world

img

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி....

பெய்ஜிங்:
சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலக மக்களை அச்சுறுத்திய  கொரோனா தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொதுமக்களுக்கு செலு த்தப்பட்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிறகே இந்த தடுப்பூசிகள் அனைத்தும் பயன்பா ட்டுக்கு வந்துள்ளன.இதில்   சீனாவின் சினோபார்ம் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் சினோ பார்ம் தடுப்பூசியை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம்  ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் சீனாவில் தயாரான தடுப்பூசிக்கு முதல்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே சமயம் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6-வது தடுப்பூசி இதுவாகும். சினோபார்ம்  தடுப்பூசியின் செயல்திறன் 79 சதவீதம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

;