world

img

கொரோனாவாக் தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானது... ஆய்வில் தகவல்....

பெய்ஜிங்:
சீனாவின் கொரோனாவாக் தடுப்பூசி குறித்து ‘தி லான்செட்’ என்ற தொற்று நோய் ஆய்விதழ் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது :சினோவாக் தயாரித்துள்ள கொரோனாவாக் தடுப்பூசி பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது.  3-17 வயதுடையகுழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே வலுவான ஆன்டிபாடி சக்தியை  தூண்டுகிறது.  சீனாவின் ‘கொரோனாவாக்’ தடுப்பூசியை மொத்தம் 550 பேருக்கு செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இரண்டு டோஸ் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே, 96 சதவீதம் பலனளிக்கிறது.

முதல் கட்ட பரிசோதனையில் 1.5 மைக்ரோகிராம் தடுப்பூசியும், 3 மைக்ரோ கிராம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதில் 3 மைக்ரோகிராம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இடையே 100 சதவீத பலனும்; 1.5 மைக்ரோகிராம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இடையே 97 சதவீத பலனும் கண்டறியப்பட்டுள்ளது.தடுப்பூசி செலுத்திய பிறகு பெரும்பாலானவிளைவுகள் லேசான அல்லது மித மானவையாக மட்டுமே உள்ளன.  பொதுவாக ஊசி செலுத்திய இடத்தில் உண்டாகும் வலி போன்றவை மட்டுமே விளைவுகளாக அறியப்பட்டு உள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சினோவாக் லைப் சயின்சஸ் கோ, நிறுவனத்தின் கியாங் காவ் கூறுகையில், கொரோனாவாக் வலுவான நோய் எதிர்ப்பு சக்திகளை தூண்டுகிறது  என்பது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது, மேலும் பெரிய, பல இன மக்களை உள்ளடக்கிய பிற பிராந்தியங்களில் மேற்கொண்ட ஆய்வுகள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் சம்பந்தப்பட்ட நோய்த்தடுப்பு உத்திகளுக்கு  தெரிவிக்க மதிப்புமிக்க  புள்ளிவிவரங்களை  வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

;