world

img

விண்வெளிக் குப்பைகளை அகற்ற விண்ணில் பாய்ந்த சீன செயற்கைக் கோள்

விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காகவும், சீர் செய்வதற்காகவும், சீனா புதிய தொழில்நுட்பதோடு உருவாக்கிய செயற்கைகோளை சோதிப்பதற்காக வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங்கிலிருந்து ஷிஜியான் -21 என்ற செயற்கைக் கோள் மார்ச்-3B என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.

விண்வெளிக் குப்பைகளை அகற்றவும், அவற்றின் பாதையை சீர்செய்யும் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளை சீனா பரிசோதித்து பார்க்க உள்ளது.

பல்வேறு உலகநாடுகள் ஏவிய செய்ற்கைக் கோள்கள் காலாவதியான பின் விண்வெளிக் குப்பையாக சுற்றி வருகின்றன. இவற்றால் வருங்காலங்களில் விண்வெளி செயல்பாடுகள் பாதிக்கப்பட கூடிய சூழ்நிலை உள்ள நிலையில், அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளது.

;