world

img

ஒரே நாளில் 7 லட்சம் முறை  மின்னல் வெட்டு   கனடாவில் பற்றி பரவும் காட்டு தீ 


கனடாவின் பிரிட்டிஷ் கொம்பியா மற்றும் மேற்கு அல்பெர்டா பகுதியில் ஓரே நாளில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 117 முறை மின்னல் வெட்டியது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும்  காட்டுப்பகுதியில் பல இடங்களில்  தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கொலம்பியா தீயணைப்பு துறையினர் தெரிவித்திருப்பதாவது: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் மின்னல் வெட்டால் 136 இடங்களில் காட்டுத்தீ பற்றி பரவி வருகிறது. இதனை அணைக்கு முயற்சியில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றனர். 
இதற்கிடையே கனடா அரசு தொடர்ந்து தீ பரவலை கட்டுப்படுத்த கனடாவின் ராணுவ விமானங்களையும்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் என தெரிவித்திருக்கிறது. இந்த தொடர் மின்னல் வெட்டால் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
 

;