world

img

கஜகஸ்தானில் ராணுவ விமானம் விபத்து - 4 பேர் பலி

கஜகஸ்தான் அல்மேட்டி நகரில் ராணுவ விமான விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்தனர். 

கஜகஸ்தான் நாட்டில் அல்மேட்டி வழித்தடத்தில் ராணுவ விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்து, அவசரமாக தரை இறங்கி உள்ளது.
அல்மேட்டி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும் போது திடீரென விமானத்தில் தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. 

;