world

img

40 ஆயிரம் நில அதிர்வு - மக்கள் அவதி 

ஐஸ்லாந்தில் 20 நாட்களில் 40 ஆயிரம் நில அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலைகள் அதிகமாக உள்ள பகுதிகளில் இவ்வாறான நில அதிர்வு அடிக்கடி ஏற்படுவது வழக்கம். ஐஸ்லாந்து எரிமலைகளால் சூழப்பட்ட நாடு ஆகும். 
இந்நிலையில் ஐஸ்லாந்தில் உள்ள கிரிண்டவிக் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நில அதிர்வு தற்போது வரை 40,000 முறை ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலையில் வெடிப்பிற்கான அறிகுறியாக இந்த அதிர்வு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அப்பகுதி மக்கள், எரிமலை வெடிக்கும் என்ற பயம் இல்லை, ஆனால் அதிர்வுகளினால் தூக்காமல் இருப்பது சோர்வாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
 

;