world

img

ஐரோப்பா: காற்று மாசால் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் பலி

ஐரோப்பா, நவ.16-

காற்று மாசின் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் பலியாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பா சுற்றுச்சூழல் நிறுவனம் சமீபத்தில் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் ஐரோப்பா கண்டத்தில் காற்று மாசின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இந்த காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பலியாகி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, ஜெர்மனி நாட்டில் அதிகப்பட்சமாக ஒராண்டில் 53,800 பேர் காற்று மாசினால் ஏற்பட்ட பாதிப்புகளினால் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இத்தாலி நாட்டில் 49,900 பேர், போலந்து நாட்டில் 39,300 பேர், பிரான்ஸ் நாட்டில் 29,800 பேர் மற்றும் ஸ்பெயின் நாட்டில் 23,300 பேர் உயிரிழந்துள்ளனர்.  

அதேநேரம், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளபடி காற்று மாசின் பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகள் ஒரளவிற்கேனும் பின்பற்றியிருந்தால் இந்த உயிரிழப்புகளில் குறைந்தபட்சம் 58 சதவிகிதத்தினரை காப்பாற்றியிருக்க முடியும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

;