world

img

சூயஸ் கால்வாயில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்கம்

சூயஸ் கால்வாயில் ஒருவாரமாக சிக்கிய சரக்குக் கப்பல் நேற்று மீட்கப்பட்ட நிலையில், அவ்வழியாக இன்று கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் மற்றும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழிப் பாதையாக உள்ளது. இந்த கால்வாய் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. உலக அளவு வணிக கப்பல் போக்குவரத்தில் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை  சூயஸ் கால்வாய் வழியாக மிக பெரிய கப்பலான எவர்கிவ்வன் சரக்கு கப்பல் சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்றது. அப்போது , இரண்டு பக்க கரைகளிலும் மோதி சிக்கிக் கொண்டது. இதனால் அப்பாதையில் மற்ற சரக்கு கப்பல்கள் செல்ல முடியாமல் சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 
ஒரு வாரமாக கப்பலை மிதக்க வைக்க பெரும் முயற்சிகள் நடந்து வருகின்றது. இதனை தொடர்ந்து தரைதட்டிய கப்பலை 10 இழுவைக் கப்பல்கள் மூலம் இழுக்கப்பட்டு மணல் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் சுமார் 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டன.
பின்னர் ஒரு வாரம் கழித்து நேற்று, கப்பல் மிதக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று சரக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. 
சூயஸ் கால்வாய் வழியே கப்பல் போக்குவ்ரத்து பாதிக்கப்பட்டதால், நாள் ஒன்றுக்கு சுமார் 70 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

;