world

img

இஸ்ரேல் மீது ஈரான் எதிர்தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதற்கு எதிர்தாக்குதலாக இஸ்ரேலின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள ராணுவ அலுவலங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் ஜூன் 13 அன்று தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானின் ராணுவத் தளபதிகள், விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்தாக்குதலாக நேற்று ஜுன் 13 நள்ளிரவு முதல் ஜூன் 14 அதிகாலை வரை ஏவுகணைகள் மூலம் ஈரான் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பந்தமாக வெளியான வீடியோக்களில், இஸ்ரேலின் கட்டடங்கள் இடிந்துள்ளதும், அங்குள்ள வாகனங்கள் சேதமாகியுள்ளதும் பதிவாகியுள்ளது.