world

img

மூச்சுத்திணறும் இந்தியாவுக்கு உதவும் வளைகுடா நாடுகள்....

திருவனந்தபுரம்:
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள வெளிநாடுகளின் உதவி கேட்டு அணுகியிருந்தார். அதன்படி சவூதி அரேபியா 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மற்றும் நான்கு ஐஎஸ்ஓகிரையோஜெனிக் தொட்டிகளை முதல் கட்டமாக இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. சவூதி அரேபியா விரைவில் 5,000மருத்துவ தர ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவுக்கு அனுப்பும். அதானி குழுமத்துடனும், எம்.எஸ். லிண்டே குழுமத்துடன் இணைந்து சவூதி அரேபியாவின் ஆக்சிஜன்
வழங்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அதிக திறன் கொண்டஆக்சிஜன் கொள்கலன்கள் செவ்வாய்க்கிழமை காலை இந்தியா வந்தடைந்தன. முன்னதாக கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்கள் துபாய்க்கு இந்திய விமானப்படை சி -17 விமானத்தில் அனுப்பப்பட்டன. பயன்படுத்த தயாராக உள்ள 12 கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்களை துபாயில் இருந்து பெற்று செவ்வாயன்று அனுப்பியதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கு உடனடி உதவிகளை வழங்க பஹ்ரைன் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆச்சிஜன் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும். கோவிட்டில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய பஹ்ரைன் அமைச்சரவை தனது விழைவைத் தெரிவித்தது.

இதுபோல், ஆக்சிஜன் மற்றும் பிற மருத்துவ உதவிகளை இந்தியாவுக்கு அனுப்ப குவைத் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியாவால், விரைவில் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று நம்புவதாகவும் குவைத் தெரிவித்துள்ளது.
துன்பத்தில் இருக்கும் இந்திய மக்களுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய தேசியக் கொடி புர்ஜ் கலீபாவில் ஏற்றப்பட்டது. ‘ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா’ என்றசொற்றொடரும் புர்ஜில் தோன்றியது. துபாயில் உள்ள க்ரீக்,கலீபா பல்கலைக்கழகம் மற்றும் துபாய் பிரேம் ஆகியவற்றிலும் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. இதற்குமுன்பு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போதும் இந்தியாவுக்கு ஆதரவாக தேசிய கொடி புர்ஜ் கலீபாவில் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில், மூச்சுக் காற்றுக்காக கூக்குரலிடும் இந்திய மக்களும், இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றின் அதிவேக பரவுதலும் அரபு ஊடகங்களில் பெருமளவில் இடம் பிடித்துள்ளன.

;