world

img

கேமரூன் ஈக்வடார் ஈரானுக்கு சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் 


பெய்ஜிங், ஏப்.12-
கேமரூன், ஈக்வடார் மற்றும் ஈரான் நாடுகளுக்கு சீனாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கேமரூனில் தொற்று நோய் தோன்றிய பின்னர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அதுவும் சீனாவின் தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. மேலும் தொடர்ந்து சீனாவும், கேமரூனும்  இணைந்து, பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று  கேமரூனுக்கான சீனத் தூதர் வாங் யிங்வூ தெரிவித்துள்ளார்.
ஈக்வடார் நாட்டிற்கு  இரண்டாவது தொகுதியாக  சீன கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை  ஈக்வடார் தலைநகர் கியுடோவுக்கு  ஈக்வடார் துணை அரசுத் தலைவர் முனியோஸ்  உள்ளிட்ட அந்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்றனர். உலகளவில் கொரோனா தடுப்பூசிகளின் வினியோகம் பற்றாக்குறையாக இருக்கும் நிலைமையில், சீன அரசு ஈக்வடாருக்கு தடுப்பூசிகளை முன்னுரிமையுடன் ஏற்றுமதி செய்வது, ஒற்றுமை மற்றும் ஒன்றுக்கொன்று உதவி ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக முனியோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈராக்கிற்குச் சீன அரசு நன்கொடையாக வழங்கும் கொரோனா தடுப்பூசியின் 2 வது தொகுப்பு ஈராக் தலைநகர் பாக்தாத்தை ஞாயிறன்று சென்றடைந்தது. அதனை ஈராக்கிற்கான சீன தூதர் மற்றும் ஈராக் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் தடுப்பூசிகள் ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
 

;