world

img

பெகாசஸ் விவகாரம் : என்எஸ்ஒ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு 

பெகாசஸ் உளவு மென்பொருளைத் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான ‘என்எஸ்ஓ’ உருவாக்கிய பெகாசஸ்  எனப்படும் உளவு மென்பொருளின் துணைக் கொண்டு இந்தியாவின் பத்திரிகையாளர்கள்,செயற்பாட்டாளர்கள் எனப் பல நூறு பேர்களின் செல்பேசியை அரசு ஒட்டுக் கேட்டது. அதற்கு ஆதாரமாக ஒட்டுக்கேட்கப்பட்டோரின் பெயர் 
பட்டியலைச் சர்வதேச ஊடகங்கள் வெளியிடப்பட்டது.

மேலும், 14 நாடுகளின் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், செய்தியாளர்கள் உட்பட ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோரின் செல்பேசிகளில் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளைக் கொண்டு உளவு பார்க்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

அதனைத் தொடர்ந்து, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க பல்வேறு தரப்பினர் அடங்கிய விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் ரேம் பென் பரக் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பெகாசஸ் உளவு மென்பொருளைத் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் இன்று ஆய்வில் ஈடுபட்டதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது. என்எஸ்ஓ நிறுவனமும் தங்கள் அலுவலகத்தில், இஸ்ரோலியப் பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகளால் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. 

;