world

img

பாலஸ்தீன குழந்தைகளை கொல்லும் அதானியின் ஆயுதங்கள்

இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் நடத்தி வரும் தாக்குதலில் பாலஸ் தீன குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வதற்கு அதானி நிறு வனத்தால் உருவாக்கப்பட்ட ட்ரோன் களே அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதானி குழுமத்தை புறக்கணியுங்கள் எனவும் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம் அதானி நிறுவனம் வழங்கும் நிதியை பெறக்கூடாது எனவும் குழந்தைகளுடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதானி குழுமம் இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியாவில் எரிசக்தி வணி கத்தை துவங்கியதை தொடர்ந்து இஸ்ரே லில் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ராணுவத்துடன் இணைந்து ஆளில்லா விமானம், ட்ரோன்கள் மற்றும்  எதிரி களின்  ட்ரோன்களை எதிர்த்து  தாக்கும் “வேட்டையாடும் ட்ரோன்” (Hunting  Dron ) அமைப்புகளையும் தயா ரித்து இஸ்ரேலுக்கு விற்பனைசெய்கிறது.    மேலும்  இந்திய ராணுவம் மற்றும் இந்தி யாவின்  பிற துணை ராணுவப் படைகளுக் கான ஆயுதங்களையும் தயாரித்து வரு கிறது.

 இஸ்ரேலுக்கான ஆளில்லா விமா னங்களை தயாரிக்க  2018 ஆம் ஆண்டில்  அதானி குழுமத்தின் முதன்மை  நிலக்கரி சுரங்க வணிக நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் இணை ந்து அதானி எல்பிட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் என்ற கூட்டு   நிறுவனத்தை துவங்கின.  இந்த கூட்டு நிறுவனத்தில் இருந்து  தான்  இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு ஹெர்ம்ஸ்-900 ஆளில்லா விமானங்களை உருவாக்கி வருகிறது அதானி நிறுவனம். 2014 ஆண்டு முதலே பாலஸ்தீனர்களை கண்காணிப்பதற்கும் அவர்கள் மீது குண்டுவீசி கொலை செய்வதற்கும்  ஹெர்ம்ஸ்-900 என்ற அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட ஆளில்லா விமானங் களே  இஸ்ரேல் ராணுவத்தின் விருப்பத் தேர்வாக உள்ளது.  2018 க்கு பிறகு இந்த விமான தயாரிப் பில் அதானி நிறுவனமும் இணைந்ததன் மூலம் 2023 அக்டோபர் 7 அன்று போர் அறிவிப்பு செய்ததில் இருந்தே அதானி மற்றும் இஸ்ரேலின் கூட்டு  மூலமாக ஆயி ரக்கணக்கான பாலஸ்தீன குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதே கூட்டு நிறுவனம் இந்தியாவில், ஹைதராபாத்தில் மிகப்பெரிய மற்றும் சிறிய அளவிலான  ஆளில்லா விமானங் களை தயாரித்து வருகின்றன.  ஆளில்லா விமானங்கள் மட்டுமின்றி இஸ்ரேல் ராணுவத்திற்கு  துப்பாக்கிகள் மற்றும் நவீன ரக இயந்திர துப்பாக்கிகளை மத்தி யப் பிரதேசத்தின் குவாலியரில் உரு வாக்கி  வருகிறது அதானி நிறுவனம்.