world

img

இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்ட இலங்கை

கொழும்பு - கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய 3,750 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.  

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான அன்னிய செலாவணி நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதனால் எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், சிங்கப்பூரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இலங்கை இறக்குமதி செய்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இறக்குமதிக்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில் சி.பி.சி., தலைவர் சுமித் விஜிஷிங்கே கூறியதாவது, இந்தியா -- இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்படி, 3,750 கோடி ரூபாய் கடன் வாங்குவது தொடர்பாக இங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அந்த தொகையை வைத்து பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்படும் என இவ்வாறு அவர் கூறினார்.

;