இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் புதிய அறிவிப்பு ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை மார்ச் 31-ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என இலங்கையின் சுற்றுலா அமைச்சரகம் தெரிவித்துள்ளது.