world

img

இந்திய படகு மூழ்கிய இடம் தெரிந்தது.... மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது....

கொழும்பு:
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில்இலங்கை கடற்படை படகால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய மீன்பிடிப் படகு மற்றும் அதில்இருந்த மீனவர்களை தேடும் பணிகள் 2வது நாளாக புதனன்றும் நடக்கிறது என  இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வாகூறினார்.

அந்த படகு மூழ்கிய இடம் தெரிந்ததாகவும், அது ஆழ்கடலுக்குள் முழுமையாக மூழ்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், அந்தப் படகில் பயணித்தமீனவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த கட்ட நடவடிக்கையாக, படகை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக வும் அவர் கூறுகிறார்.கடற்படையின் சுழியோடிகள் (முக்குளிப்போர்) குழுவொன்று இந்த நடவடிக்கையில் புதனன்று ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், விபத்துக்குள்ளாகி மூழ்கும் படகை தேடும் பணிக்காக கடற்படைக்கு சொந்தமான படகுகளும்  கப்பலொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.விபத்துக்குள்ளான படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தமக்கு தெரியாது என்றும் இந்திக்க டிசில்வா கூறினார்.எனினும், இந்தியாவிலிருந்து மீன்பிடிநடவடிக்கைகளுக்காக சென்ற 4 மீனவர்கள், நாடு திரும்பவில்லை என இந்தியஅதிகாரிகள் தம்மிடம் கூறியதாக கடற்படைபேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா கூறுகிறார்.

;