world

img

170 ஆண்டுகளுக்கு பின் காட்சியளித்த பறவை

170 ஆண்டுகளுக்கு பின் அழிந்து போனதாக கருதப்பட்ட கருப்பு கண்கள் கொண்ட பாப்லர் பறவை  இந்தோனேஷியாவில் காட்சியளித்தது.

இந்தோனேஷியாவின் போர்னியோ மழைக்காடுகளில் 170 ஆண்டுகளுக்கு முன்பு, கருப்பு கண்களை கொண்ட பாப்லர் பறவை இனம் வாழ்ந்த வந்தது. 1848 ஆம் ஆண்டு கடைசியாக இந்த பறவை தென்பட்டதாக ஆவணத்தில் உள்ளது.
அதன் பின்னர் இந்த பறவையை யாரும் பார்க்கவில்லை.இதை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் முஹம்மது சுரான்டோ மற்றும் முஹம்மது ரிஸ்கி என்ற இருவர் போர்னியோ மழைக்காடுகளில் இந்த பறவையைக் கண்டுள்ள்னர். ஆனால் பறவை குறித்த விவரம் தெரியாததால் பறவையை புகைப்படம் எடுத்து விட்டு பறக்கவிட்டனர்.
பின்னர் பறவைகள் கண்காணிப்பு குழு இந்த புகைப்படத்தை பார்த்து , 170 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கருப்பு கண்கள் கொண்ட பறவை என்று அதை குறித்து தெரிவித்துள்ளனர்.

“இது போன்ற கண்டுபிடிப்புகள் நம்பமுடியாதவை. மேலும் பல தசாப்தங்களாக அல்லது அதற்கு மேலாக காணாமல் போன பிற உயிரினங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது’’ என, உலக வனவிலங்கு பாதுகாப்பின் மூத்த இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

;