world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்....

ரஷ்யா கண்டனம்

மாஸ்கோ:

ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டணியும் மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகர நடவடிக்கைகள் இந்த பிராந்தியத்தில் ராணுவ அச்சுறுத்தலை அதிகரித்து வருகின்றன என்றுரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சியோகு கண்டனம் தெரிவித்துள்ளார். 

                            ****************

உறவில் உறுதி

பெய்ஜிங்:

ஜப்பானுடனான உறவுகளை உறுதியான முறையில் மேம்படுத்தவே விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அதேவேளையில் ஜப்பான் ராணுவ ரீதியான தனது தவறுகளை சரி செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்ப தாகவும் கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ஜப்பான் தொடர்ந்து நெருக்கமாக இருந்துகொண்டு கிழக்குஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்வதையே சீனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. 

                            ****************

‘சந்தை’ நாயகன்

வாஷிங்டன்: 

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்று நூறு நாட்கள் முடிந்துள்ளன. இந்த காலகட்டத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கணிசமான அளவு முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு ஜனாதிபதியின் முதல் நூறு நாட்களில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

                            ****************

ராணுவம் அதிர்ச்சி

யாங்கூன் : 

மியான்மரின் ராணுவ ஆட்சிக்கெதிராக அந்நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள பல்வேறு சிறுபான்மை இன மக்கள் குழுக்களின் ஆயுதப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. காரென் இனக்குழுவைச் சேர்ந்த ஆயுதப்படையினர், தாய்லாந்து - மியான்மர் எல்லையில் உள்ள சல்வீன் நதிக் கரையில் அமைந்திருந்த ராணுவ முகாமை தாக்கி தகர்த்துள்ளனர். இது மியான்மர் ராணுவத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

                            ****************

மரணமில்லை

போர்ட்டோ :

போர்ச்சுக்கல்லில் கடந்த ஒன்பது மாதங்களில் முதன் முறையாக கோவிட் மரணங்கள் எதுவும்பதிவாகவில்லை. சுமார் 8.3லட்சம் மக்கள் கொரோனா வால் பாதிக்கப்பட்டிருந்தனர். சுமார் 17 ஆயிரம் பேர் மரணமடைந்தனர். இந்நிலையில் 2020 ஆகஸ்டுக்கு பிறகு தற்போதுதான் மரணம் இல்லா நிலை எட்டப்பட்டுள்ளது. 

                            ****************

வீழும் பெருக்கம்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் 1930களுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் தொகை பெருக்க விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 7.4 சதவீதம் அளவிற்குஅதிகரித்திருந்த மக்கள்தொகை 2020 கணக்கெடுப்பில் வீழ்ச்சியடைந்திருப்பதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

                            ****************

கடலில் மோதல்

டெஹ்ரான்: 

பாரசீக வளைகுடா வில் இந்த மாத துவக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானிய போர்க்கப்பல்களுக்கு இடையே ஒருபதற்றம் நிறைந்த மோதல்நடந்திருப்பது தெரியவந்துள் ளது. இந்த கடலில் சென்று கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலை நோக்கி அமெரிக்க கடலோர பாதுகாப்புப் படை கப்பல்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே பதற்றம் எழுந்துள்ளது. இச்செய்தி இப்போதுதான் ஊடகங்களில் கசிந்துள்ளது.

;