world

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை

ஜெனிவா,அக்.24-  உலகையே அச்சுறுத்திய கொரோ னா தொற்றுக்கு பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சர்வதேச நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறுகையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த மே மாதம் வரை உலகம் முழுவதும் 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். ஒவ்வொரு சுகாதார அமைப்பின் முதுகெலும்பும், அவற்றின் பணி யாளர்கள் ஆவர். நம் வாழ்வின் ஒரு  கட்டத்தில் நாம் அனைவரும் சார்ந்திருக்கும் சேவைகளை இவர்களே வழங்குகிறார்கள். நம் ஆரோக்கி யத்தை பாதுகாக்கும் மக்கள் தங்களை  பாதுகாப்பற்றவர்களாக உணரும் போது நாம் அனைவரும் அவ்வளவு பாதிக்கப்படுகிறோம்.  உலக அளவில் சராசரியாக ஐந்து சுகாதாரப் பணியாளர்களில் இருவர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக 119 நாடுகளின் தரவுகள்  தெரிவிக்கின்றன. ஆனால் பிராந்தி யங்கள் மற்றும் பொருளாதார குழுக் களிடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.  எனவே கொரோனா தடுப்பூசி பணிகளில் சுகாதாரப் பணியாளர் களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

;