world

img

காலத்தை வென்றவர்கள் : ரூடால்ப் டீசல் பிறந்தநாள்...

ரூடால்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் 1858ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாள் தியேடர் டீசலுக்கும் எல்லிஸ் டீசலுக்கும் மகனாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிறந்தார்.இவர் ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடால்ப் டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

டீசல் இயந்திரம் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே உலகம் முழுவதும் டீசல் என்ஜின் பயன்பாட்டுக்கு வந்தது.இவருக்கு 1901 ஆம் ஆண்டு எலியட் கிரெஸ்சான் என்னும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விஞ்ஞானி ரூடால்ப் டீசல் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் மறைந்தார்.

பெரணமல்லூர் சேகரன்

 

;