world

img

தைவானை தனிமைப்படுத்த அமெரிக்க முயற்சி பெலோசிக்கு தடை; வலுவான நகர்வுகளுடன் சீனா

பெய்ஜிங், ஆக. 6- தைவானின் கடுமையான தடைகளையும் எச்சரிக்கை களையும் மீறி அங்கு சென்ற அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மீது சீனா தடைகளை விதித்துள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதையும், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் குழிபறிப்பதை பெலோசி யின் வருகை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘ஒரே சீனா’ கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருவதால் அமெரிக்காவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள சீனா தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ கமாண்டர்களின் பேச்சு வார்த்தை, பாதுகாப்புக் கொள்கை ஒருங்கிணைப்பு பேச்சு வார்த்தை, இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ கடல்சார் ஆலோசனை ஒப்பந்தம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திரும்புவதற்கான ஒத்துழைப்பு, எல்லை தாண்டிய குற்ற வழக்குகளில் சட்ட உதவி பெறுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்ற பிறகும் சீனாவை சீண்டிவருகிறார். தைவானை சீனா தனிமைப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், அமெரிக்க அரசியல்வாதிகள் தீவுக்கு வருவதை சீனாவால் தடுக்க முடியாது எனவும், பெலோசி டோக்கியோவில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இடைத்தேர்தலில் அரசியல் ஆதாயங்க ளுக்காக பெலோசி தைவான் சென்றுள்ளார் என்ற வலுவான குற்றச்சாட்டும் உள்ளது. வளைகுடாவில் இராணுவ ஆத்திர மூட்டலை அதிகரிக்க பெலோசியின் வருகையை ஒரு ஆயுதமாக சீனா பயன்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்கன் குற்றம் சாட்டினார்.

தைவானில் சீனாவின் 100 போர் விமானங்கள்
 

இரண்டு நாள் ராணுவப் பயிற்சியில் தைவானை 100 சீன போர் விமானங்களும் பல போர்க்கப்பல்களும் சுற்றி வளைத்தன. வெள்ளியன்று மட்டும் தைவானின் வான் மற்றும் கடல் பகுதிகளில் 68 விமானங்களும் 13 போர்க்கப்பல்களும் பயிற்சிகளை மேற்கொண்டன. தைவானைச் சுற்றியுள்ள ஆறு மையங்களில் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சியில் போர் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் பெரிய நாசகாரக் கப்பல்கள் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளியன்று ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

;