world

img

ஒற்றுமை அவசியம்

காரகஸ், மே 14- வெனிசுலா மற்றும் பெட்ரோலிய ஏற்று மதி நாடுகள் அமைப்பு(ஓபெக்) ஆகியவற்  றுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம் படுத்துவது என்று இரு தரப்பும் முடிவு செய்துள்ளன. வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் ஓபெக் பொதுச் செயலா ளர் முகமது பர்கின்டோ ஆகிய இருவர் சந்திப்பின்போது இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அப்போது, ‘‘ஓபெக் உறுப்பு நாடுகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மனித குலத்தேவையை மனதில் கொண்டு எண்ணெய் சந்தையை ஒழுங்குபடுத்தி வைத்தல் அவசியம்’’ என்று மதுரோ குறிப்பிட்டார்.  2016 ஆம் ஆண்டில் ஓபெக் உறுப்பு நாடு களுக்கும், உறுப்பினரல்லாத நாடு களுக்கும் இடையில் போடப்பட்ட உடன்  பாட்டை சுட்டிக்காட்டிய மதுரோ, நெருக்கடி சூழல்களில் கச்சா எண்ணெய் விலையை நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.