world

ரயிலுக்கு இறக்கைகள் சீனாவின் புதுமையான முயற்சி

பெய்ஜிங், நவ.26- அதி வேகமாக ஓடும் ரயில் வண்டிகளில் இறக்கைகளைப் பொருத்தி அவற்றின் வேகத்தை அதிகப்படுத்தும் புதிய முயற்சியில் சீனா இறங்கியிருக்கிறது.  சீனாவில் ஏராளமான புல்லட் ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின் றன. தற்போது ஒரு மணிநேரத்தில் 350 கி.மீ. என்ற வேகத்தில் அவை உள்ளன. ரயில் பெட்டிகளின் எடை யைக் குறைத்து விட்டால், வேகத்தை  மேலும் அதிகரிக்க முடியும். இத னால் பெட்டிகளில் 5 இணை இறக் கைகளைப் பொருத்தப் போகிறார் கள். இது ரயில்களின் எடையைக் குறைத்து, வேகத்தை 28.6 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்க முடியும்.  தற்போது 350 கி.மீ. வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் புல்லட் ரயில்களில் எந்தப் பெட்டியை விலக் காமலும், பெட்டியை மாற்றி அமைக் காமலும் இறக்கைகளைப் பொருத் துவதால் 450  கி.மீ. வேகமாக அதி கரிக்க முடியும் என்று பரிசோதனை முயற்சிகள் காட்டுகின்றன.

இதற் கென்று தனியாக சிஆர்450 என்ற திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உரு வாக்கி செயல்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள்.  இத்தகைய முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டவை யாகும். 1980களில் ஜப்பான் இறக் கைகளைப் பொருத்தும் முயற்சி யை மேற்கொண்டது. ஆனால் இறக்கைகள் மிகவும் பெரியதாக இருந்திருக்கிறது. அப்போது அமைக்கப்பட்டிருந்த தண்டவா ளங்களில் இறக்கைகள் பொருத் தப்பட்ட ரயில்கள் பயணிப்பது பெரும் கடினமான ஒன்றாக இருந்தது. இத னால் அந்த முயற்சியை ஜப்பா னியர்கள் கைவிட்டனர்.  

தற்போதைய முயற்சியில், சிறிய இறக்கைகளை ரயிலின் மேற் பகுதியில் பொருத்திப் பார்க்க சீன விஞ்ஞானிகள் முடிவு செய்திருக்கி றார்கள். அதி விரைவு ரயில்கள் செல்வதற்காகவே 37 ஆயிரத்து 900 கி.மீ. நீளத்திற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு நீளத்திற்கு மிக வேகமாக செல்லக் கூடிய வண்டிகளுக்கு வேறு எந்த நாட்டிலும் தண்டவாளங்கள் அமைக்கப்படவில்லை.  இந்தத் திட்டம் குறித்து மகிழ்ச்சி அடைந்தாலும், சில அம்சங்களில் பெரும் கவனம் தேவை என்கிறார் கள் விஞ்ஞானிகள். செலவும், எரி பொருளும் பெரும் அளவில் குறைக் கப்படும். ஆனால், மிக வேகமாகச் செல்வதால் சக்கரங்கள் விரைவில் தேய்ந்துவிடும். அதேபோல், இறக்கைகளின் வடிவம் மிகவும் கவனமாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதைப் பெட்டிகளில் பொ ருத்தும்போதும் கவனம் அவசியம் என்றும் கூறியுள்ளார்கள்.

;