world

img

கொந்தளித்த அமெரிக்கர்கள் - கருக்கலைப்புக்கு தடையா?

அமெரிக்காவின் உச்சநீதி மன்றம் 1973 இல் ரோ வெர்சஸ் வாடே வழக்கில் தேசம் தழு விய வகையில் பெண்களின் உரிமை யான கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது என முதன்முதலாக அளித்த தீர்ப்பு வர லாற்று பிரசித்தி பெற்றது. சில பத் தாண்டுகளாக அமெரிக்க பெண்கள் போராடிய பின்னணியில் 1973 - ல் இந்த  தீர்ப்பு வந்தது.  தற்போது உச்சநீதிமன்றம் இத்  தீர்ப்பை ஜூன் 24- ல் ரத்து செய்துள் ளது. கருவுற்று 15 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பு செய்வது சட்டவிரோத மானது என தீர்ப்பு கூறுகிறது. உச்சநீதி மன்றத்தின் ஆறு நீதிபதிகள் கருக் கலைப்பு சட்டவிரோதமானது என்றும் மூன்று நீதிபதிகள் சட்டப்பூர்வமானது என்றும் கருதிய நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 2- ல் தீர்ப்பு இப்படித்  தான் வரும் என கசிந்த செய்தி, பொலிட்  டிகோ என்ற இதழில் வெளியானது. அப்போதே ஆயிரக்கணக்கான பெண் கள் கருக்கலைப்பு உரிமையை பாது காக்க தெருக்களில் இறங்கி போராடி னார்கள். இந்த செய்தி வெறும் வதந்தி என பிரச்சாரம் செய்யப்பட்டது . தீர்ப்பு ஜூன் 24ல் வெளிவந்தவுடன் குடியரசு கட்சி ஆளும் பல மாநிலங்க ளில் கருக்கலைப்பு தடையை அம லாக்குவோம் என அறிவித்தனர். 26 மாநி லங்களில் உடனடியாக கருக்கலைப்பு தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.  அமெரிக்க மக்களில் 72% பேர் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கிறார்கள். ஆனால் பொதுஜன கருத்து உச்ச நீதி மன்றத்தின் முடிவு மீது தாக்கம் ஏற் படுத்தவில்லை. பல சமூக இயக்க அமைப்புகள், கருக்கலைப்பு உரிமை காக்கப்பட வேண்டும் என கூறுவது மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல; எனவே ஜனநாயகத் தன்மை இல்லாத உச்சநீதிமன்றத்தை கலைக்க வேண் டும் எனவும் கூறுகின்றனர்.

பெண்களின் உரிமைகளை பறித்து  வரும் தலிபான்களைப் போல அமெ ரிக்காவில் வலதுசாரி சக்திகள் கருக்  கலைப்பு தடைக்கு ஆதரவாக செயல்  படுகின்றன. ஜனநாயக கட்சி ஆட்சியில் இருந்த போதிலும் 1973 தீர்ப்பின் அடிப்ப டையில், அதாவது கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்ற தவறியது. உக்ரைனின் சுதந்திரம் குறித்து  அதிகமாக ஜோ பைடன் கவலைப்படு கிறார். அமெரிக்க பெண்களின் சுதந்தி ரம் குறித்து கவலை கொள்ளவில்லை. தென் அமெரிக்காவில் அர்ஜென்டினா போன்ற பல கத்தோலிக்க நாடுகளில் கூட கருக்கலைப்பு உரிமை வழங்கப் பட்டுள்ளது.

;