- போலந்து மக்கள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதை ஆதரிக்கும் அதே சமயத்தில் உக்ரைன் அகதிகளுக்கு நிதி உதவி செய்வதை கடுமையாக எதிர்க்கின்றனர் என ஒரு கருத்துக் கணிப்பு வெளிப் படுத்துகிறது.
- பல ஐரோப்பிய தேசங்களில் உக்ரைன் அகதிகளுக்கு எதிரான மனோநிலை உருவாகியுள்ளது. உக்ரைனுக்காக போரில் குதித்து ரஷ்ய படையால் கைது செய்யப்பட்ட இரு பிரிட்டன் வீரர்கள் மற்றும் ஒரு மொராக்கோ வீரர் ஆகிய மூவருக்கு டான் டெஸ்க் உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்துள் ளது. எனினும் இவர்கள் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம். பிரிட்டன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- அமெரிக்கா ராணுவ அமைப்பான பென்டகன் தனது முக்கிய ஆயுத உதிரி பாகங்களுக்கு சீனாவை சார்ந்துள்ளது. சீனா ரஷ்யா நெருக்கத்தால் இது பென்டகனுக்கு கவலையை உருவாக்கியுள்ளது.
- உக்ரைன் ராணுவ வீரர்கள் சரண் அடைவதும் ராணு வத்தை விட்டு விலகி தப்புவதும் அதிகமாகி வரு கிறது என அயர்லாந்து பத்திரிகை “இண்டி பெண்டண்ட்” தெரிவித்துள்ளது. தடைகளின் அடுத்த தவணையாக புல்டோசர்/ கன ரக லாரிகள் ஆகியவை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய் வதை ஜப்பான் தடை விதித்துள்ளது. ஜனவரி-மே ஐந்து மாதங்களில் ரஷ்யா-சீனா இடையே வர்த்தகம் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.
- மேற்கத்திய நாடுகளுடனான இழந்த வர்த்தகம் சீனா மூலம் ஈடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஜெர்மனி ஒரு ஆயுதத்தை கூட உக்ரைனுக்கு அனுப்பவில்லை. ஜெர்மனி ரஷ்யாவை முழுவதுமாக பகைத்துக் கொள்ள தயக்கம்!
- உக்ரைன் புலம்பல்! அமெரிக்கா விதிக்கும் தடைகள் ரஷ்யாவை பாதிக்கும் முன்பாக அந்த தேசத்தையும் ஐரோப்பா வில் அமெரிக்காவின் வாலாக உள்ள தேசங்களை யும் முதலில் பாதிக்கிறது என புடின் கூறியுள்ளார்.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை எப்படி உள்ளது எனில், அது அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறியுள்ளது போல உள்ளது.
- ஆனால், வாக்குரிமை இல்லாத மாநிலமாக பரிதாபமாக உள்ளது என குரேஷியாவைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மிஸ்லோவ் கொலாகுசிக் சாடியுள்ளார்.