world

img

மின்சாரக் கார்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்க டெஸ்லா கோரிக்கை 

மின்சாரக் காருக்கு இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரி பிரதமர் அலுவலகத்தை டெஸ்லா நிறுவனம் அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனமான டெஸ்லா தனது மின்சாரக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால், மின்சாரக் கார் இறக்குமதிக்கான வரி உலக நாடுகளிலேயே இந்தியாவில் மிக அதிகம் என டெஸ்லா கருதுவதால், வரியைக் குறைக்கக் கோரிப் பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பிரதமரை டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் காரின் இறக்குமதி வரியைக் குறைத்தால், உள்நாட்டு மின்சாரக் கார் உற்பத்தியைப் பாதிக்கும் எனக் கூறி டாட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

;