world

img

ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு.... மியான்மரில் மருத்துவ பணியாளர்கள் போராட்டம்.... 

யாங்கூன்
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி  மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.  

இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த அந்நாட்டு ராணுவம் முறைகேடுகள் நடந்ததாக கூறியது. குற்றசாட்டை மியான்மர் தேர்தல் ஆணையம் நிராகரிக்க, அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. 
இந்நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றி பிரதமர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்தது. அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் எனவும், பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் எனவும் ராணுவம் அறிவித்துள்ளது.

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள சுமார் 70 மருத்துவனைகளில் உள்ள மருத்துவ பணியாளர்கள் தங்களது பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மியான்மர் சட்ட இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. 

;