world

img

மைக்ரோசாஃப்ட் கோளாறு: வங்கி, விமான சேவைகள் பாதிப்பு

மைக்ரோசாஃப்ட் சேவையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உலகளவில் விமான சேவை, பங்குச்சந்தை மற்றும் வங்கி செயல்பாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஓ.எஸ்-ஐ பயன்படுத்தும் மில்லியன் கணக்கான பயனர்கள் தங்கள் கணினியில் Blue Screen Error காண்பிப்பதாகவும், திடீரென shut down மற்றும் Restart ஆகிறதாகவும் புகார் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விமான சேவை, வங்கி சேவை, ஊடக சேவை, மருந்தை விநியோகிக்கும் சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் 1000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் 190க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் கூறுகையில், இந்த கோளாறுகளுக்கு cyber security பிரச்சனை காரணம் அல்ல என்றும், Crowdstrike நிறுவனத்தின் அண்டிவைரஸில் அப்டேட் மேற்கொள்ளப்பட்டதால், மைரோசாப்ட்டின் அஸூர் கிளவுட் பிளாட்ஃபார்மின் கான்பிகிரேஷன் மாறியுள்ளதாகவும், இதனால் அந்நிறுவனத்தின் 365 செயலிகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சனையை சரி செய்யும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.