ஈரான் -ரஷ்யா ஒத்துழைப்பு விரிவாக்க ஒப்பந்தம்
ஈரானும் ரஷ்யாவும் பல்வேறு துறை களில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான 19 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஈரான் தலைநகரில் நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டுப் பொருளாதார ஒத்துழைப்பு ஆணையத்தின் 17 ஆவது கூட்ட முடிவில், எரிசக்தி, சுகா தாரம், வர்த்தகம் மற்றும் கல்வி ஆகிய துறைகளிலும் எண்ணெய் உற்பத்தி மேம் பாட்டையும் உள்ளடக்கி இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
போர் விமானங்கள் மூலம் பாலஸ்தீனர்களுக்கு உணவு வினியோகம்
ஜோர்டான், கத்தார், எகிப்து நாடுகள் பாலஸ்தீனர்களுக்கான உண வுப்பொருட்களை போர் விமானங்களில் இருந்து பாராசூட் மூலமாக இறக்கியுள்ளன. காசாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல விடாமல் இஸ்ரேல் ராணு வம் தடுத்து வரும் நிலையில் முதல் முறை யாக விமானங்கள் மூலம் உணவுப் பொருட் கள் வழங்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் காசாவில் தீவிரமான செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கடனை திருப்பிச் செலுத்த கால நீட்டிப்பு
பாகிஸ்தானுக்கு வழங்கிய 200 கோடி டாலர், கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை சீனா நீட்டித் துள்ளது. மார்ச் மாதமே கடனை செலுத்தும் காலம் இறுதியாக இருந்த நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் போராடி வரும் நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது. புதிய அரசு அமையும் நிலையில் நெருக்கடியை சரி செய்ய பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் புதிய கடன்களை கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போராடி வரும் மருத்துவர்களுடன் தென் கொரிய அரசு பேச்சுவார்த்தை
தென் கொரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருகிறது அரசு. நாட்டின் மருத்துவ சேவையில் 80 சதவீதம் பங்கு வகிக்கும் 10,000 இளநிலை மருத்துவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் வேலைக்கு திரும்பவில்லை என் றால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என அரசு மிரட்டியது. ஆயினும் இந்நிலை யில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
புதிய உலகமயமாக்கலுக்கு பிரேசில் அழைப்பு
சமத்துவ உலகை நோக்கிய புதிய உலகமயமாக்கலுக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது. ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் வறுமை மற்றும் காலநிலை மாற்றத்தை சரிசெய்து பணக் காரர்கள் அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தி உலக சமத்துவமின்மையை குறைக்கும் வகையிலான “புதிய உலகமயமாக்கலுக்கு” பிரேசில் அழைப்பு விடுத்தது. ஆனால் உக்ரைன் மற்றும் காசா போர் தீவிரம் இக்கோரிக்கை யை மறைக்கும் வகையில் உள்ளது.