world

img

இந்திய பெண் விமானிகள்  சாதனை....

புதுதில்லி:
இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது.இந்த விமான பயணம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி டிவிட்டரில்,   முழுமையாக பெண்களை கொண்ட விமானிஅறையில், கேப்டன் சோயா அகர்வால்,கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் இருந்து,இந்த வரலாற்று தொடக்க விமானத்தைஇயக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.கேப்டன் சோயா அகர்வால் 8 ஆயிரம் மணி நேரத்துக்கும் அதிகமாக பறந்தஅனுபவமும், பி-777 விமானத்தில் 10ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கட்டளை அனுபவமும் கொண்ட திறமையான விமானி என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

;