world

img

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 139-ஆவது இடம்... பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்தை விடவும் மோசம்....

புதுதில்லி:
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் (UN World Happiness Report 2021) ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் செயல்படும் ‘ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் அமைப்பு’(UN Sustainable Development Solutions Network) என்ற அமைப்பு இந்த பட்டியலை கடந்த 9 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. 

அதன்படி 2020-ஆம் ஆண்டிற்கு, மொத்தம் 149 நாடுகளில் உள்ள மக்களிடம் அவர்களின் வாழ்க்கை மதிப்பீடுகள், தனி மனித சுதந்திரம், சமூக ஆதரவு, ஜிடிபி, ஊழல், மக்களின் நேர்மறைஉணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் போன்றவற்றின் அடிப் படையில் கேள்விகள் கேட்டு, அதன் முடிவுகளைத் தற்போது வெளியிட்டுள்ளது.இதில், 4-ஆவது ஆண்டாக இந்தஆண்டும் பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. டென்மார்க் 2-ஆம் இடத்தையும், ஸ்விட்சர்லாந்து 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து முறையே 4-ஆவது மற்றும் 5-ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. அமெரிக்கா 19-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.ஆனால், இந்தப் பட்டியலில், இந்தியா 139-ஆவது இடத்தையே பிடித் துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான சீனா 84-ஆவது இடத்தையும், வங்கதேசம் 101-ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 105-ஆவது இடத்தையும் பிடித்து, இந்தியாவை விட நல்ல நிலையில் வந்துள்ளன.

புருண்டி, ஏமன், தான்சானியா, ஹைதி, மலாவி, லெசோதோ, போட்ஸ்வானா, ருவாண்டா, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் மட்டுமே இந்தியாவுக்கு கீழே உள் ளன.கொரோனா தொற்றுக் காலத்தை, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் எவ்வாறு கையாண்டன; தங்களின் குடிமக்களை எந்தளவு மகிழ்ச்சியாக வைத்திருந்தன; மக்கள் எவ்வாறு பயணித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியாகவும் தங்களின் இந்த ஆய்வை பார்க்கலாம் என்று ஐக்கிய நாடுகள் குழு தெரிவித்துள்ளது.

;