world

img

இன்னும் சில மாதங்களில் டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் ஆதிக்கம்  செலுத்தும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை...  

ஜெனிவா 
டெல்டா என்ற பெயரில் கொரோனா வைரஸ் இந்தியாவில் உருமாற்றம் அடைந்து கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய மட்டுமின்றி 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது ஆட்டத்தை துவங்கியுள்ள இந்த வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், டெல்டா பிளஸ் என்ற பெயரில் மற்றொரு முறை உருமாற்றம் அடைந்து லேசான வேகத்தில் நாடு முழுவதும் பரவி வருகிறது. 

இந்நிலையில் இந்த டெல்டா வைரஸ் இன்னும் சில மாதங்களில மோசமான வகையில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார  நிறுவனம் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் (சுருக்கம்), "ஜூன் 29-ஆம் தேதி நிலவரப்படி டெல்டா வைரஸ் 96 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவும் என்பதால் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் தான் பரவும் என கூற முடியாது. யாருக்கும் தெரியாமலேயே கொரோனா இந்த வகை கொரோனா வேகமாக பரவும். 

இன்னும் சில மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் உலக முழுவதும் ஆதிக்கம் செலுத்தும். இந்த வைரஸை கட்டுப்படுத்த புதிய உத்திகள் தேவையில்லை. தபோதுள்ள சுகாதார கட்டமைப்பு கட்டுப்பாடுகள் போதும்" என கூறப்பட்டுள்ளது.     

;