world

img

உலகளவில் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை 17.92 கோடியை கடந்தது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.92 கோடியை கடந்துள்ளது.

சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.  இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.92 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 16.37 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.  மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.74 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 
தற்போது வைரஸ் பரவியவர்களில் 1.15 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் 82 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

;