world

‘உலகை மிரட்டும் ஒமிக்ரான்’

லண்டன், நவ.29- புதிதாக உருமாறியுள்ள ஓமிக்ரான் வைரசைக் கட்டுப்படுத்த அவசர நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரிட்டனின் வேண்டுகோளின் பெய ரில் ஜி7 நாடுகள் கூடி விவாதித்துள்ளன. முதல் கட்டமாக ஜி7 நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடந்துள்ளது. ஜி7 அமைப் பின் தலைமைப்பொறுப்பில் தற்போது பிரிட்டன் இருக்கிறது. இதனால் ஓமிக்ரான் பாதிப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஜி7 கூட்டத்தை பிரிட்டன் கூட்டி யுள்ளது. மேலும் புதிதாக உருமாறியுள்ள வைரஸ் பிரிட்டனிலும் பரவியிருப்பது கூடு தல் கவலையை அந்நாட்டிற்கு ஏற்படுத்தி யிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சுகா தாரத்துறை அமைச்சர்கள் பங்கேற் கிறார்கள். 

எச்சரிக்கை தேவை

மீண்டும் வாயையும், மூக்கையும் பாது காப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதோடு சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்றும் பிரிட்டன் சுகா தாரத்துறை தனது மக்களுக்கு அறிவுறுத்தி யுள்ளது. அறிகுறிகள் இருப்பின் உடனடிப் பரிசோதனை கட்டாயம் என்று கூறியுள்ள சுகாதாரத்துறை, பரிசோதனைகளுக்கான வசதிகளை அதிகப்படுத்தியிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் வைரஸ் பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுவரையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், போட்ஸ்வானா, பிரிட்டன், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இத்தாலி, நெதர்லாந்து மற்றும்  தென் ஆப்பிரிக்காவில் இந்த வகை  வைரஸ் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா வில்தான் இது உருமாற்றம் அடைந்தது  என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்குப் பல நாடுகள் தடை விதித்துள்ளன. அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தடை விதிப்பதாக ஜப்பான் கூறியிருக்கிறது.
 

;