world

img

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 4 பேர் சுட்டுக் கொலை.... வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு அராஜகம்...

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேசத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அந்நாட்டு அரசு துப்பாக்கிச் சூடு நடத்தி 4 பேரின் உயிரைப் பறித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த ஓராண்டாக வெளிநாட்டுப் பயணம் எதையும் மேற்கொள்ளாத பிரதமர் நரேந் திர மோடி, வங்கதேசத்தின் 50-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமையன்று வங்கதேச நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்கா விமானநிலையத்திற்கே நேரில் வந்து பிரதமர் மோடியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அந்நாட் டின் சார்பில் பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் வழங் கப்பட்டது.

பின்னர் வங்கதேச சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட மோடி, அந்நாட்டின் தந்தை ஷேக்முஜிபூர் ரகுமானுக்கு, இந்தியாவின் சார்பில் மகாத்மா காந்திவிருதை வழங்கி உரையாற்றினார். அப்போது, “தனது 20 வயதில் வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்றேன்”என்ற இதுவரை யாரும் கேள்விப் படாத ஒரு தகவலைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே, இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்து, முஸ்லிம்கள் மீது மோடி அரசு மேற்கொண்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேச மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். சிட்டஹாங்கில் உள்ள காவல்நிலையம் ஒன்றையும் முற்றுகையிட்டனர். அப்போது போராட்டக்காரர் களை கலைக்க வங்கதேச போலீசார் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேரின் உயிர் போனது. 2 பத்திரிகையாளர்கள் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். பிரதமர் மோடியின் வங்கதேசப் பயணம் 4 பேரின் உயிரைக்காவு வாங்குவதற்கு காரணமாகி விட்டது.

;