world

லித்தியம் உற்பத்தியில் உடன்பாடு பொலிவியா-மெக்சிகோ கையெழுத்து

லா பாஸ், ஆக.8- லித்தியம் உற்பத்தியை மேற்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்று பொலிவியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் உடன்பாடுகளில் கையெழுத்திட்டிருக்கின்றன. உலகிலேயே லித்தியத்தின் இருப்பு தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ளது. ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் 8 கோடியே 90 லட்சம் டன் லித்தியம் இருப்பு இருக்கிறது. இதில் 2 கோடியே 10 லட்சம் டன் லித்தியம் பொலிவியாவில் இருக்கிறது. மொத்த லித்தியம் இருப்பில் 50 விழுக்காடு மூன்று தென் அமெரிக்க நாடுகளில் உள்ளது. பொலிவியாவோடு, சிலி மற்றும் அர்ஜெண்டினா ஆகிய இரண்டு நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. ஆனால் வர்த்தக ரீதியான இந்த லித்திய வளத்தைப் பயன்படுத்துவதில் பொலிவியா பின்தங்கியே இருக்கிறது. இந்த வளத்தைப் பயன் படுத்தும் உடன்பாட்டில் பொலிவியா மற்றும் மெக்சிகோவின் அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்படலாம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டு ள்ளது. இந்த உடன்பாட்டை மேலும் அடுத்தகட்டத் திற்கு எடுத்துச் செல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இரு தரப்பு உறவோடு நின்று விடாமல், அப்பகுதி சார்ந்த ஒத்துழைப்பாக இதை மாற்றவுள்ளனர். இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் களும் பொலிவியாவில் அரசு நிறுவனம் இயக்கி வரும் ஒரு லித்திய தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டனர். இந்தத் தொழிற்சாலையில் தற்போது 800 டன் லித்தியம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதை விரைவில் 15 ஆயி ரம் டன் லித்தியம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை யாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர். லட்சக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பாக வறண்டு போன  ஏரி ஒன்றில் 10 ஆயிரம் சதுர கி.மீ. அள வுக்கு லித்தியம் உற்பத்திக்கான மையத்தை அமைத் திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

;