world

img

கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் 20 கோடி அபராதம்!

கொரோனா குறித்து வதந்தி பரப்புவோருக்கு 10 லட்சம் ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையை உலகமே எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா குறித்த வதந்திகளும் கொரோனாவை விட வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர், பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு 10 லட்சம் ரியால் வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
10 லட்சம் ரியால் என்பது இந்திய மதிப்பில் 20.10 கோடி ரூபாய் ஆகும்.

;