world

img

இத்தாலியில் மீண்டும் ஊரடங்கு அமல்

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று இத்தாலி அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது.   
கடந்த சில தினங்களாக இத்தாலியில் தொற்றின் பாதிப்பு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 27,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஈஸ்டர் வாரத்தை தொடர்ந்து ரோம் மற்றும் மிலனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ,சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல வேண்டும். 
ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அத்தியாவசியமில்லாத கடைகள் நாடு முழுவதும் மூடப்படுகிறது.
இத்தாலியில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் வரும் வாரங்களில் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அரசு தகவல் வெளியிட்டுள்ளது

கடந்த ஆண்டில் இத்தாலியில் கொரோனாவால் 1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக அளவில் 7 வது இடத்தில் உள்ளது. 
 

;