world

img

காலத்தை வென்றவர்கள் : லூயிஸ் பிரெய்ல் நினைவு நாள்....

லூயிஸ் பிரெய்ல் பிரான்ஸ் நாட்டில் 1809 ஜனவரி-4ல் பிறந்தார்.இவர் பார்வையற்றவர்கள் படிப்பதற்கான எழுத்தினை உருவாக்கியவர். அதனால் அவரது பெயரில் பிரெய்ல் எழுத்து என்றே அழைக்கப்பட்டது.  பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில்ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.பிரெய்லியின் படத்துடன், 2009ஆம் ஆண்டில் வெளியான ஐக்கிய அமெரிக்க நாணயம் இவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையாளர்களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகும். இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன. இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.இவர் 1852ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் நாள் மறைந்தார்.

===பெரணமல்லூர் சேகரன்===

;