world

img

காலத்தை வென்றவர்கள் : ஜி.யு.போப் பிறந்தநாள்.....

ஜி.யு.போப் 1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் பிறந்தார்.கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர்.தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

தமிழ் தவிர தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில்1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்குகற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்றுக் கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.உதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொன்னார்,பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார், இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார். உதகையில் அவரதுபணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ‘மறை நூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார்.

முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.1. இறப்புக்குப் பின் தனது கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.2. தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். (பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்)3. கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும்போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும். பொழுதெல்லாம்தமிழ்த் தொண்டாற்றிய ஜி.யு. போப் 1908ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் மறைந்தார்.

;