world

img

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது இங்கிலாந்து 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்துள்ளது . 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் , கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இந்த தடுப்பூசியை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு -அஸ்ட்ரா ஜெனேகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து கண்டுபிடித்தவை. மேலும் , இதன் காப்புரிமை இங்கிலாந்து நிறுவனத்திடம் உள்ளது . 

இருந்தும் , இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் இங்கிலாந்திற்குள் வரவேண்டுமானால்  14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்று பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்தது . அதன்படி , இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என  இங்கிலாந்து  அரசு கட்டாயப்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு தற்போது  அங்கீகாரம் அளித்துள்ளது. 

இதன் மூலம் , இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியிருந்தால், 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் , இங்கிலாந்தில் தாங்கள் செல்ல இருக்கும் இடம் பற்றிய விவரங்களையும் வெளிப்படுத்த வேண்டியது இல்லை எனத் தெரிவித்துள்ளனர் .  

;